கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்: உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது வனப்பாதை!
பக்தர்கள் காலை வேளையில் மட்டுமே காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். மாலை மற்றும் இரவு நேரங்களில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதிக்குள் பிளாஸ்டிக் மற்றும் உக்காத கழிவுகளைக் கொண்டு செல்லவோ அல்லது வீசவோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் மற்றும் ஏனைய வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பாதையை விட்டு விலகி உட்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனப் பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுப் பாதையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்பதால், போதிய குடிநீர் மற்றும் அவசர மருந்துகளை கையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் நலன்கருதி கடற்படையினர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆங்காங்கே தற்காலிக மருத்துவ முகாம்களையும், குடிநீர் விநியோகப் புள்ளிகளையும், பாதுகாப்புச் சாவடிகளையும் அமைத்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே