கனடாவில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம் - 4 பேர் மீட்பு
#Canada
#Accident
#Lanka4
#Boat
#Rescue
#Missing
#L4
Prasu
5 hours ago
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஜலசந்தி ஒன்றில் படகு ஒன்று மூழ்கியதில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஜார்ஜியா ஜலசந்தியில் பயணித்துக்கொண்டிருந்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்தப் படகில் 10 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த நான்கு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் மூன்று பேருடைய நிலைமை சீராக இருப்பதாகவும் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், படகில் பயணித்தவர்களில் மீதமுள்ள ஆறு பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.
இதற்கிடையில், படகில் பயணித்தவர்கள் யார், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே