கனடாவில் நாடு தழுவிய ரீதியில் தேடப்படும் 46 வயது கொலை குற்றவாளி

#Police #CANADA #Murder #LANKA4 #search #Parents #L4
Prasu
2 months ago
கனடாவில் நாடு தழுவிய ரீதியில் தேடப்படும் 46 வயது கொலை குற்றவாளி

பெற்றோரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கனடாவில் தேடப்பட்டு வரும் 46 வயதுடைய நபர், டொராண்டோ நகரில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபரான ஜோர்டான் சாங்வின் டொராண்டோவின் ஹை பார்க் பகுதிக்கு அருகில் கடைசியாகக் காணப்பட்டதாகவும், அவர் தற்போது நடந்தே பயணிப்பதாக நம்பப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் நடுத்தர உடல்வாகு, கத்தரித்த நரை கலந்த தலைமுடி , தாடி-மீசை இல்லாத முகம் , கடைசியாகக் காணப்பட்டபோது சாம்பல் நிற நீண்ட கை சட்டையும், அடர் நிற அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார்.

கடந்த ஜூன் 18ம் திகதி வீட்டில் வைத்து, தனது பெற்றோராரான 70 வயது கரோல் சாங்வின் மற்றும் 71 வயது கார்வுட் சாங்வின் ஆகிய இருவரையும் ஜோர்டான் சாங்வின் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!