இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் இடமாற்றம் உண்டாகும். மாற்றலாவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் முன்னேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் அன்பான அணுகுமுறை பாராட்டைப் பெறும். பயணங்களின் போது கவனம் தேவை. உடல்நலம் சீராக இருக்கும்.

ரிஷபம்

பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உருவாகலாம். மனக்கவலைகள் குறையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக அமையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரம் சாதகமாக இருக்கும். உடல் நலம் தேறும்.

மிதுனம்

நண்பர்களுடன் இனிய நேரம் அமையும். புதிய அனுபவங்கள் கிடைக்கலாம். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். தொழிலில் சாதகமான மாற்றம் உருவாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கணவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும். அனுசரிப்பது நல்லது.

கடகம்

புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியபோக்கு நீங்கும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். தொழிலில் மதிப்பு உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய வாய்ப்புகள் தொடர்ந்து உருவாகும். மாணவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.

சிம்மம்

எதிர்பாராத மகிழ்ச்சி கிடைக்கலாம். பணவரவு சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இனிய உரையாடல் அமையும் மனைவி வழியில் உதவிகள் உண்டு. வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு முன்னேற்றமான நாள். உடல்நலம் நல்ல நிலையில் இருக்கும்.

கன்னி

உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும் நாள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்

மகளுக்கு திருமணம் கூடி வரும். தொழிலில் சாதகமான மாற்றம் உருவாகும். மனதில் நேர்மறை எண்ணங்கள் நிலவும். நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்

சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் எதிர்கால நன்மை தரும். உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும்.

தனுசு

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். வழக்குகளில் நன்மை உண்டு. புகழ் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். சுப செய்திகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும்.

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

கும்பம்

நண்பர்களால் நன்மை உண்டு. பயண வாய்ப்புகள் உருவாகலாம். உடல்நலம் மேம்படும். மனஅழுத்தம் குறையும். பழைய பிரச்சினைகள் தீரும். சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. திருமண முயற்சிகள் கைகூடும். புதிய தொடர்புகள் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். போட்டிகளை வெல்வீர்கள்.

மீனம்

கோதரர்களின் உதவி கிடைக்கும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவடையும். சிறிய தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வாகன யோகம் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4