3 நாட்களில் 43 கோடி சம்பாதித்த நடிகை சமந்தா

#Actress #TamilCinema #LANKA4 #Collection #Movie #L4
Prasu
2 months ago
3 நாட்களில் 43 கோடி சம்பாதித்த நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தெலுங்கு மொழியில் இப்படம் வெளியானாலும் தமிழ் மொழியிலும் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் இப்படம் வெளியானது.

இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.43 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!