கனடாவில் மின்சாரம் தாக்கி 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

#School #Student #Canada #Hospital #Lanka4 #Electric #L4
Prasu
2 days ago
கனடாவில் மின்சாரம் தாக்கி 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற நீர் விளையாட்டுப் பூங்கா ஒன்றிற்குச் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் மின்சாரக் கசிவு காரணமாக விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில்லிவாக் பகுதிக்கு அருகிலுள்ள 'கல்டஸ் லேக் வாட்டர்பார்க்' என்ற பொழுதுபோக்கு பூங்காவிற்கு மினிகாடா நடுநிலைப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்தனர்.

அங்குள்ள ஒரு விளையாட்டுப் பகுதிக்குச் செல்வதற்காக மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த குழந்தைகள் யாரும் விபத்து நடந்த நேரத்தில் தண்ணீருக்குள்ளோ அல்லது எந்தவொரு விளையாட்டு சாதனங்களின் மீதோ இருக்கவில்லை என பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ஸ்டீனன்பெர்க் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, வரிசையில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் அங்கிருந்த இரும்புத் தடுப்புக் கம்பியை தொட்டபோது இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4