உலகையே திரும்பி பார்க்க வைத்த 19 வயது யாழ் வீரன் குகதாஸ் மாதுலன்

#India #SriLanka #Jaffna #LANKA4 #Cricket #Player #L4
Prasu
3 months ago
உலகையே திரும்பி பார்க்க வைத்த 19 வயது யாழ் வீரன் குகதாஸ் மாதுலன்

இந்தியா A அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், வெறும் 2 போட்டிகள் மட்டுமே விளையாடி அனுபவம் கொண்ட 19 வயது இளம் வீரன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 

நேற்று நடந்த இந்தியா A அணிக்கு எதிரான போட்டி சமனில் முடிந்து 'சூப்பர் ஓவர்' என்ற நிலைக்குச் சென்றது. 

அப்போது இலங்கை அணி சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடி 16 ஓட்டங்கள் குவித்தது. 

இதையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது. 

இந்நிலையில், எதிரணியில் எந்தவொரு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் சந்தித்த மற்றும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வைபவ் சூரியவன்ஷி இலங்கையை சேர்ந்த 19 வயது இளைஞனின் பந்துவீச்சிற்கு திணறியுள்ளார். 

குறித்த ஓவரில் இரண்டு வீரர்களையும் தனது துல்லியமான பந்துவீச்சு வித்தையால் நிலைகுலையச் செய்து, அந்த சூப்பர் ஓவரையே ஒட்டுமொத்தமாக அடக்கி, இலங்கை A அணிக்கு ஒரு காவிய வெற்றியைப் பெற்று தந்துள்ளார் யாழ்ப்பாணத்து மண்ணின் வீரன் குகதாஸ் மாதுலன். 

தோனி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களாலேயே பாராட்டுப் பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வாகி, இன்று இலங்கை நாட்டின் 'A' அணியை அசாத்தியமாக வெற்றி பெற வைத்திருக்கும் இந்த யாழ்ப்பாணத்து சிங்கம், தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே ஒரு மாபெரும் உத்வேகம். 

நேற்றைய வெற்றி தம்புள்ளையில் இலங்கை 'ஏ' அணிக்கு கிடைத்த ஒரு மறக்க முடியாத வெற்றி ஆகும். 

நம் மண்ணின் பிள்ளைகள் தடைகளை உடைத்து, உலக மேடையில் சாதிக்கும் போது பிறக்கும் அந்தப் பெருமித சந்தோஷத்திற்கு ஈடு இணையே ஏதுமில்லை. 

இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள் மாதுலன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!