இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

தொழிலில் புதிய முன்னேற்றம் காணப்படும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார். உடல்நலம் மேம்படும்.

ரிஷபம்

தகவல் தொடர்புத்திறன் மூலம் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். மன அமைதி அதிகரிக்கும். குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். தம்பதிகளிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.

மிதுனம்

பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப உறவுகள் வலுப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிரபலங்கள் உதவுவர். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். மாணவர்களுக்கு சாதகமான நாள்.

கடகம்

எதிர்பார்த்த தகவல் வரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மனநிறைவு உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும்.

சிம்மம்

பேச்சுத்திறனால் வெற்றி காண்பீர்கள். தொழிலில் பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மனதில் தன்னம்பிக்கை வளரும். காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். நல்ல விளைச்சல் உண்டாகும்.

கன்னி

பொருளாதார முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழிலில் பாராட்டு கிடைக்கும்.உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு தங்கள் வீட்டுப்பாடங்களை செய்ய சாதகமான நாள்.

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

விருச்சிகம்

வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வேலையில் மனநிறைவு உண்டாகும். வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. கலைஞர்களின் கனவு நனவாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

தனுசு

திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப உறவுகள் வலுப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான நாள். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நலம் சீராகும்.

மகரம்

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். குடும்பத்தலைவிகளின் கனவு பலிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்கள் நன்மை தரும். மன அமைதி அதிகரிக்கும். மாலை நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கலாம். சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். பண உதவி கிடைக்கும்.

கும்பம்

பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

மீனம்

செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சமூகத்தில் மதிப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4