மகளிர் உலகக் கோப்பை - பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்திய அணி
#India
#Women
#Pakistan
#Lanka4
#Cricket
#WorldCup
#L4
Prasu
1 hour ago
10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 6வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில், ஸ்மிருதி மந்தனா 68 ஓட்டங்களும் ஹர்மன்பிரீத் கவுர் 36 ஓட்டங்களும் ரிச்சா கோஷ் 34 ஓட்டங்களும் குவித்தனர்.
இதையடுத்து, 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.
பாகிஸ்தான் அணி சார்பில், முனீபா அலி 41 ஓட்டங்களும் ஆலியா ரியாஸ் 18 ஓட்டங்களும் குவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே