முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் விமானம் ஓட்டிய ஏர் கனடா விமானி

#Flight #CANADA #LANKA4 #Pilot #licences #Airlines #L4
Prasu
3 months ago
முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் விமானம் ஓட்டிய ஏர் கனடா விமானி

முன்னாள் ஏர் கனடா விமானி ஒருவர், 17 ஆண்டுகளாக முறையான உரிமம் இல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகளை வர்த்தக விமானங்களில் ஏற்றிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஒன்டாரியோவைச் சேர்ந்த 59 வயதான ஜெஃப்ரி வால் என்ற அந்த விமானி, 2009ல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றதிலிருந்து போலியான சான்றுகளுடன் விமானம் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு போலியான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், அந்த விமானி உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.

"நிறுவனம் இந்த விஷயத்தை கனடா போக்குவரத்துத் துறைக்குத் தானாக முன்வந்து தெரிவித்தது" என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!