தமிழக அமைச்சர்களிடம் இலங்கை பாடகர் சங்கீதன் குறித்து பேசிய கேரள பாடகர் வேடன்

#SriLanka #Tamil Nadu #ARREST #Minister #LANKA4 #Kerala #Singer #L4
Prasu
3 months ago
தமிழக அமைச்சர்களிடம் இலங்கை பாடகர் சங்கீதன் குறித்து பேசிய கேரள பாடகர் வேடன்

கேரளாவில் பிரபல ராப் பாடகராக வலம் வருபவர் ஹிரன்தாஸ் முரளி என்கிற வேடன். இளம் பாடகரான இவர் வேடன் என்கிற பெயரிலே தொடர்ந்து இயங்கி வருகிறார். 

இவரது தந்தை கேரளத்தை சேர்தவர் என்றும் தாய் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இவர் தமிழில் ‘நரிவேட்டை’ படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்திலும் பாடியிருந்தார்.

இந்நிலையில், தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகங்களில் மரியாதை நிமித்தமாக பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு உடனான சந்திப்பில், இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் குறித்து பாடியதற்காக ராப் பாடகர் சங்கீதன் என்பவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து இருவரும் உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!