இலங்கை சொல்லிசை பாடகர் கைது - கனேடிய மேயர் கண்டனம்

#SriLanka #ARREST #CANADA #LANKA4 #Singer #condemn #Mayor #L4
Prasu
3 months ago
இலங்கை சொல்லிசை பாடகர் கைது - கனேடிய மேயர் கண்டனம்

இலங்கையில் இளம் தமிழ் ராப் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட, தொழில்ரீதியாக சங்கீ என்று அறியப்படும் 24 வயதான தமிழ் இசைக்கலைஞர் சங்கீதன் கணேசுகுமாரை விடுதலை செய்யக் கோரி பிரவுன் இவ்வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதோடு கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக இலங்கை அதிகாரிகள் இதைப் பயன்படுத்துவதாகவும் மேயர் பேட்ரிக் பிரவுன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு கலைஞர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கும் இசையைப் பகிர்வதற்கும் அவரைக் குற்றவாளியாக்குவது பேச்சுரிமையின் அப்பட்டமான மீறலாகும் என்றும் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் மிகப்பெரிய தமிழ் சமூகங்களில் ஒன்று பிராம்ப்டனில் வசிப்பதால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) நீண்ட காலமாக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!