நார்வே செஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து
ஆஸ்லோ நகரில் நடந்த 14வது சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்து நார்வே செஸ் பட்டம் வென்றுள்ளார்.
இந்நிலையில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )