இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் தொடர்: திலக் வர்மா தலைமையிலான இந்திய 'ஏ' அணி வருகை!
இலங்கை 'ஏ', இந்தியா 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' ஆகிய மூன்று அணிகள் இந்த முத்தரப்புத் தொடரில் களம் காண்கின்றன. நடைபெறும் காலம்: இப்போட்டிகள் ஜூன் 09ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரை தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RDICS) நடைபெறவுள்ளன.
தொடரின் முதலாவது லீக் போட்டியில் ஜூன் 9ஆம் திகதி திலக் வர்மா தலைமையிலான இந்திய 'ஏ' அணி, சஹான் ஆராச்சிகே தலைமையிலான இலங்கை 'ஏ' அணியை எதிர்கொள்கிறது.
இந்த வெள்ளைப்பந்து (White-ball) தொடருக்கான இந்திய அணிக்கு நட்சத்திர வீரர் திலக் வர்மா கேப்டனாகவும், ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட தொடை நரம்பு (Hamstring) காயம் காரணமாக ரியான் பராக் இத்தொடரிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மைய ஐபிஎல் தொடரில் அசத்திய 15 வயது இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) மீது பலரது எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனிட்கரும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜியும் செயல்படுகின்றனர்.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான இரண்டு நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற தேர்வுப் போட்டிகள் (First-class matches) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )