அடுத்த பொதுத்தேர்தலில் புதிய கட்சியுடன் அதிரடியாக களமிறங்கவுள்ள கு. அண்ணாமலை

#India #Tamil Nadu #Lanka4 #Politician #Politics #L4
Prasu
1 hour ago
அடுத்த பொதுத்தேர்தலில் புதிய கட்சியுடன் அதிரடியாக களமிறங்கவுள்ள கு. அண்ணாமலை

தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2ம் திகதி பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக 5 பக்க கடிதத்தை வழங்கினார்.

இந்தக் கடிதத்தில், தான் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டதன் பின்னணி, சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் தெரிவித்திருந்தார்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை.

இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக பேசிய அண்ணாமலை, பாஜகவில் எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை கடந்த 18 மாதங்களாகவே தெரிவித்தேன்.

பாஜகவில் இருந்து விலகும் முடிவை கடந்த ஆண்டே எடுத்து விட்டேன். அடுத்து வரும் தேர்தலில் நம்முடைய கட்சி நிச்சயமாக போட்டியிடும். 

அதற்கு நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டை நாட்டில் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய கட்சி வேண்டுமா என்றால், நிச்சயமாக வேண்டும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் திறன் படைத்த தலைவர்களை கொண்டு வர வேண்டும். நாம் ஒரு வித்தியாசமான கட்சியாக இருந்து, அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். 

நிரந்தர தலைவர் என்பதை நாம் உடைக்கப் போகிறோம். எத்தனை முறை பதவி வகிக்க வேண்டும் என அளவுகோல் நிர்ணயிக்கப்படும். புதியவர்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!