எச்சரிக்கை : இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

#SriLanka #Warning #Fraud #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
எச்சரிக்கை : இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

கடந்த ஒரு மாதத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான 360க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு தெரிவித்துள்ளது. 

இணையவழியில் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது. 

சமீபத்திய வெசாக் மற்றும் பொசோன் பண்டிகைக் காலங்கள் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில், இணையக் குற்றவாளிகள் நன்கு அறியப்பட்ட வர்த்தக முத்திரைகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் போலி விளம்பரங்களை பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றி , அவர்களின் முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

டந்த ஒரு மாதம் முழுவதும், மோசடியான விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல் மற்றும் கடன் அட்டை விவரங்களைத் திருடுதல் தொடர்பான சம்பவங்கள் குறித்த அறிக்கைகளை பெற்றுள்ளதாக  தலைமை தகவல் பாதுகாப்புப் பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார். 

எந்தவொரு இணையவழிப் பணப்பரிவர்த்தனையும் அதிகாரப்பூர்வமான மற்றும் முறையான இணையதளம் மூலமாக மட்டுமே செய்யப்படுகிறதா என்பதைப் பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!