நாடளாவிய ரீதியில் 19 சாலை விபத்துகளில் 24 பேர் பலி!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
நாடளாவிய ரீதியில் 19 சாலை விபத்துகளில் 24 பேர் பலி!

மே மாதம் 19 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மொத்தம் 24 பேர் உயிரிழந்ததாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் காவல்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. செனதீரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த இரண்டு நாட்களில் 29 பெரிய விபத்துக்கள், 96 சிறிய விபத்துக்கள் மற்றும் 19 சொத்து சேதம் பற்றிய விபத்துக்கள்  பதிவாகியுள்ளதாகக் கூறினார்.

வெசாக் பண்டிகைக் காலத்தில் உயிரிழப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சாலைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4