ஜூன் மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #people #Lanka4 #L4
Prasu
1 hour ago
ஜூன் மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்கள் பாலினரிடையே கவனமுடன் பழகுவது நல்லது. அளவாக பேசுவது பிரச்சினைகளை தவிர்க்கும். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வங்கியில் கடன் வசதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக முதலும் அதிக வேலையாட்களை வைத்து கொண்டு தங்களது தொழிலை விரிவுபடுத்துவர். 

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இரண்டு வகையான துறைகளில் இருந்து லாபம் கிகும். குடும்பத் தலைவிகளுக்கு வெளியே தேவையான பொருட்களை கணவர் வாங்கித் தந்து மகிழ்விப்பார். 

தங்கள் கணவர் தங்களை புரிந்து கொள்வார். கணவர் வீட்டு உறவினர் வந்து போவர். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் தங்களுக்கு தெரிந்த நபர் உங்களுக்கு சிபாரிசு செய்வர். 

கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாரே குறித்த நேரத்தில் படபிடிப்பு ஆரம்பிக்கப்படும். மாணவ மாணவியருக்கு ஆசிரியரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

பரிகாரம்

  • சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று எள்தீபம் ஏற்றுவது மிக சிறந்தது.

ரிஷபம்

யார் யாரை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்தவர் நீங்கள். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதனை உண்ர்ந்தவர் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மனநிறைம் கிடைக்கும். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக பெண் ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். 

அதிக லாபத்தினை பெறுவர். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்துவீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினை அகலும். 

கணவருடைய பேச்சு அர்த்தமுள்ளதாக உணர்வீர்கள். பிள்ளைகளின் ஆதரவு பெருகும். கலைஞர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும், ஒரே நேரத்தில் பல படங்கள் புக்காகும். புகழ் கிடைக்கும். 

மக்களின் ஆதரவை பெறுவர். மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து தானாகவே மற்றவரின் தூண்டுதல் இன்றி படிக்கத் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் உட்கொள்ள வேண்டாம். 

பரிகாரம்

  • லக்சுமி நரசிம்மரை வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவது நல்லது.

மிதுனம்

எவருடைய சிபாரிசும் இன்றி தங்கள் தனித்திறமையால் முன்னேறிக் கொண்டடிருப்பவர் நீங்கள். எந்த பிரச்சினை வந்தாலும் நேருக்கு நேர் நின்று சமாளிப்பவர்.

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். தங்கள் சொந்த ஊருக்கே இடமாற்றம் செய்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்திலேயே வேறு இடத்தில் இடமாற்றம் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் இருக்கும், அது நல்ல ஆதாயத்தைத் தரும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் தையல் கலையில் ஈடுபடுபவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் வீட்டில் கலைகட்டும். கணவர் வழி உறவினர்களால் வந்த தொல்லைகள் இனி அகலும்.

கலைஞர்கள் பிரபலமாவர். பாராட்டுகள் குவியும். கலைஞர்களுக்கு படத்திற்கான முன் பணம் கிடைக்கும். தாங்கள் எதிர்பார்த்த வண்ணம் நல்ல சம்பளம் கிடைக்கும். மாணவ, மாணவிகளுக்கு வகுப்பில் அமைதி காப்பது மிக நன்று.

பரிகாரம்

  • புதன்கிழமை அன்று சீனிவாச பெருமாளை தரிசித்து துளசி மாலையை சாத்துவது நல்லது.

கடகம்

எந்த விசயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையை கடைபிடிப்பவர் நீங்கள். கோபத்தை குறைத்து விவேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் இனி தவறினை உணர்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கடனுதவி செய்வர்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த சொந்த ஊரிலிருந்து ஆட்களை வரவழைத்து முழு நேர வேலைகளை செய்து உற்பத்தியினை உயர்த்துவீர்கள். 

சொந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். குடும்ப தலைவிகளுக்கு நீண்ட காலமாக சம்பந்திகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். 

சகோதர சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு செல்வாக்கு கூடும். அரசு அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். அவர்களால் பல விதத்திலும் தங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 

தேகம் பளிச்சிடும். மாணவ மணிகளுக்கு கல்வி கற்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள் தங்களுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருவர். உடல் உஷ்ணமாகும். இளநீர் நீராகாரம் போன்றவைகளை உட்கொள்வது நல்லது.

பரிகாரம்

  • முத்துமாரி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல் படைப்பது நல்லது.

சிம்மம்

உங்களுக்கு எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாதவர் போல் முகபாவனை செய்யும் குணமிக்கவர். ரகசியத்தை பாதுகாப்பவர் நீங்கள். உத்யோகத்தில் தங்கள் திறமையால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோரின் உதவி கிடைக்கும். வேலை சுமை குறையும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. 

சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இணையதளம் வழியாக ஆர்டர்கள் வழியும். குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும். 

தம்பதியர் இடையே அன்னியோன்யம் கூடும். கலைஞர்களுக்கு தங்கள் சக ஊழியர்களால் பண உதவி கிடைக்கும். வெளிநாட்டு படபிடிப்பில் கலந்து கொள்வீர்கள். 

அதற்கு விசா கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு அரசு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றதால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதால் பய உணர்வு தேவையில்லை. உடல் நலம் சிறப்படையும்.

பரிகாரம்

  • சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று கோதுமையை நைவேத்தியமாக வைத்து படைப்பது நல்லது.

கன்னி

பெற்றோர்களை போல நண்பர்களையும் நினைக்கும் அன்பு மிக்கவர் நீங்கள். ஒருபோதும் நண்பர்களுக்கு துரோகம் செய்யாத பண்பாளர் நீங்கள்.

உத்யோகஸ்தர்கள் தங்களுடைய ஒரு பகுதிக் கடனை விரைவில் அடைத்து விடுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியும் கிடைக்கும்.

வியாபாரிகள் நினைத்தவாறே தங்களது வியாபாரம் கூட விளம்பரம் செய்வீர்கள். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்களுக்கு தொழில் செய்ய புதிய இடம் கிடைக்கும்.

குடும்ப தலைவிகளுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை செய்து பாராட்டைப் பெறுவர். பண சிக்கல்கள் அகலும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் இணையும் வண்ணம் சூழலை உண்டாகும்.

கலைஞர்களுக்கு தங்கள் சக நடிகர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை சொல்லாமல் இருப்பது நல்லது. தங்கள் புகழ் ஓங்கும் காலமாக இருக்கும். தங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும்.

மாணவ மணிகளுக்கு முன்பை விட ஞாபகத்திறன் அதிகரிக்கும்.பெற்றோர்கள் ஆலோசனைப்படி நடப்பர். வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்

  • பௌர்ணமி திதியன்று ஜீவசமாதிகளுக்கு சென்று மெடிடேஷன் இருப்பது மிக நன்று.

துலாம்

நீங்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், நண்பர், பகைவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் உதவும் குணம் உங்களுக்கு உண்டு. 

உத்யோகத்தில் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும். வங்கி கடன் மூலம் வாங்கி விடுவீர்கள். 

வியாபாரிகள் தாங்கள் விரும்பிய படியே தங்கள் தொழிலாளர்கள் தங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய கிளைகளை மேம்படுத்துவர்.

குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கங்கள் அதிகரிக்கும். வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்வர். மாமியார் மருமகள் உறவு சுமூகமாக செல்லும். 

கலைஞர்களுக்கு தங்கள் உடலை ஜிம் மற்றும் யோகாசனம் போன்ற பயிற்சியினை செய்து உடலை சீராக வைத்துக் கொள்வது நல்லது. 

திரை உலகத்திற்கு தங்கள் பாதம் பதியும் படி சாதனைப் படைப்பர். மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தனது அன்றைய பாடங்களை படித்து விடுவர். பாதத்தில் வலி வந்து போகும்.

பரிகாரம்

  • பிள்ளையாருக்கு அருகம்புல்லை ஞாயிறு அன்று சாற்றுவது நல்லது. 

விருச்சிகம்

நீங்கள் மற்றவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ப பழகி அவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். யாருடைய குறைகளையும் பொருட்படுத்தாதவர் என்றால் அது நீங்கள்தான்.

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் தொல்லை குறையும். அவர்கள் உங்களை புரிந்து கொண்டு தங்களிடம் நட்பு பாராட்டுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர் ஒருவரால் தங்களுக்கு நன்மை உண்டாகும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இனி முன்னேற்றம்தான். குடும்பத் தலைவிகளுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி குவிப்பார். 

தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். கலைஞர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்வது நல்லது. கலைஞர்களுக்கு தங்கள் கதாபாத்திரம் பேசப்படும் வண்ணம் இருக்கும். 

மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடி தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுப்பீர்கள். ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகத்தை அவ்வப்போது கேட்டுவிடுவீர்கள். 

பரிகாரம் 

  • செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்துவது நல்லது. 

தனுசு

மற்றவர்களின் தேவையை குறிப்பறிந்து உதவும் தயாள மனம் கொண்டவர் நீங்கள். வலக்கை செய்ததை இடக்கைக்கு அறியாவண்ணம் பார்த்துக் கொள்ளும் தன்னலம் அற்றவர் நீங்கள். 

வேலைக்கு செல்பவர்கள் உத்தியோகத்தில் மனஅமைதி கிடைக்கும். ஆடம்பர செலவினை தவிர்ப்பது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. 

ஒரு சேமிப்பு தொகையாவது போட்டு வைப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு இருப்பதை வைத்து தொழிலை மேம்படுத்தவும். 

புதியதொரு தொழிலை துவங்க அரசு கடன் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு கணவரது முழு சம்பளமும் தங்களுக்கு கைக்கு வரும். தங்களுடைய குடும்ப நிர்வாகம் மேம்படும். 

தங்கள் அறிவுரையை கணவர் கேட்டு நடப்பார். இளம் பெண்களுக்கு விரும்பிய வாரே நல்ல துணை கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனம் தேவை. 

அதிக பேச்சைக் குறைப்பது நல்லது. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும். மாணவர்களுக்கு தனக்கு புரிந்து கொள்ள முடியாத பாடத்தை ஆசிரியரிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறப்படையும். 

பரிகாரம் 

  • வியாழக்கிழமை அன்று மஞ்சள் வஸ்திரத்தை குருபகவானுக்கு சாத்தி வருவது தடைகளை உடைக்கச் செய்யும். 

மகரம்

நீங்கள் அதிர்ஷ்டம் வரவில்லையே என்று வருத்தப்படுபவர் இல்லை. மாறாக, முன்னேறுவதற்கு உண்டான வாய்ப்புகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமிக்கவர். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. வாய் நிதானம் தேவை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு முதல் போடுவீர்கள். 

அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை ஏற்படும். தங்கள் பிள்ளைகளின் உதவியால் பண பிரச்சினை நீங்கும்.

சகோதர சகோதரி உறவு மேம்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். கலைஞர்களுக்கு தங்களது கடன்களை இந்த மாதம் அடைத்துவிடுவர். 

தாங்கள் எதிர்பார்த்த கம்பெனியிலிருந்து அழைப்பு வரும். முன் பணம் பெறுவர். மாணவ மணிகளுக்கு தங்கள் கடின உழைப்பினால் நல்ல மதிப்பெண்களை பெறுவர். இரவில் அதிக நேரம் விழிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பரிகாரம் 

  • வியாழக்கிழமை அன்று குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகரை மனதார நினைத்துக் கொண்டு காரியங்களை துவங்குங்கள். அல்லது அருகில் உள்ள முருகப் பகவான் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் மாலையை சாத்துவது நல்லது. 

கும்பம் 

நீங்கள் புற அழகை ஆராதிப்பதை விட மற்றவர்களின் அக அழகை மட்டும் பார்த்து பழகும் இயல்புள்ளவர். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரே.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களுக்கு உதவிபுரிவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். 

வியாபாரிகளில் ஒரு சிலர் வெளிநாட்டில் தங்கள் தொழிலை துவங்குவர். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 

குடும்பத் தலைவிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு தாங்கள் காத்திருந்த வேலை கிடைக்கும். 

தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்து செல்வீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்கும். பெரிய படங்களில் இருந்து அழைப்பு வரும். 

சம்பளம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். 

பரிகாரம்

  • மலையில் வசிக்கும் முருகர் பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை அணிவிப்பது மிக நல்லது. 

மீனம்

நீங்கள் உங்கள் வாழ்வில் எதிரிகளை கூட மன்னித்து விடுவீர்கள். ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் சுமைகள் அதிகரிக்கும்.

அதனை திட்டமிட்டு முடித்து விடுவீர். சொந்த தொழில் செய்பவர்கள் ஒரு சிலர் கிளைகளை அதிகரிப்பர். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது.

பணவரவை தக்க வைப்பது நல்லது. குடும்பத் தலைவிகளுக்கு மாமியார் வீட்டில் நன்மதிப்பு கூடும். தங்களது ஆலோசனையை கேட்டு நடப்பர். 

புதியதொரு தொழில் வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வர். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பர். கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனமுடன் பழகுதல் நல்லது. 

தங்கள் படம் பல கோடியை தாண்டும் அளவிற்கு அதிக லாபத்தை பெறுவர். மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். ஒரு சிலர் பகுதி நேர வேலையில் ஈடுபடுவர். பெற்றோர்களுக்கு உதவியும் புரிவர். இடுப்பு கை கால்களில் வலி வந்து நீங்கும். 

பரிகாரம்

  • ஐயப்பனை சனிக்கிழமை அன்று சென்று வழிபடுவது மிக நன்று.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!