10 கோடிக்கும் மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் தலைமறைவு!! வவுனியாவில் சம்பவம்!

#SriLanka #Vavuniya #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
10 கோடிக்கும் மேற்பட்ட பணத்துடன்  வர்த்தகர் தலைமறைவு!! வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். 

இது தொடர்பில்  கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது. 

 வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த இளையதம்பி சுகுமார் என்ற வர்த்தகர் கௌரி ஜுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். 

அவர்  10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பல வர்த்தகரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூர் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த நபர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வவுனியாவில் பல நகை கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்ததுடன்,  கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

 இவர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாருக்கோ அல்லது 0774101802 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4