கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 05 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்கள் காரணமாக டீசல் விலை சுமார் 25 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், அதனுடன் இணைந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய், டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைக்கு அவசியமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்தக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அவர் கூறினார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான செயல்பாடுகளைப் பேணுவதற்கு கொள்கலன் போக்குவரத்து வாகனங்களை முறையாகப் பராமரிப்பது அத்தியாவசியமானது என்றும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அந்தச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )