உணவின் தரத்தை உறுதி செய்ய தானசாலைகளில் 3 கட்ட கள ஆய்வுகள்: கொழும்பு மாநகர சபை அதிரடி!
இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 464 தானசாலைகளில் மூன்று கட்டங்களாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது குறித்து கொழும்பு மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர் டெஹான் வித்தானகே மற்றும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு: மே 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 464 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 91 தானசாலைகள் சோறு விநியோகிக்கும் தானசாலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தானசாலைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பொது சுகாதார அதிகாரிகளினால் பின்வரும் மூன்று கட்டங்களாகக் கடுமையான கள ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன:
தானசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரான உணவுக் தயாரிப்புப் பணிகள். தானசாலைகள் நடைபெறும் காலப்பகுதியில் உணவின் தரம் மற்றும் விநியோக முறை.
தானசாலைகள் நிறைவடைந்த பின்னரான துப்பரவு மற்றும் கழிவகற்றல் பணிகள். தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள பொது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே இந்தத் தானசாலைகளுக்கான பதிவுகளும் கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )