"எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதே!" - கிராஞ்சியில் மக்கள் முன்னெடுத்த பாரிய எதிர்ப்புப் போராட்டம்

#SriLanka #Kilinochchi #people #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
"எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதே!" - கிராஞ்சியில் மக்கள் முன்னெடுத்த பாரிய எதிர்ப்புப் போராட்டம்

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக 28.05.2026 இன்று வியாழக்கிழமை கிராம மக்கள் மற்றும் பொதுஅமைப்புக்ககளால் கவனயீர்ப்பு போராட்டம் சற்று முன்னர் முன்னெடுக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் காற்றாலை, கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்களினால் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மண்வளம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் செய்ததையே இந்த அரசாங்கமும் செய்கின்றது, கடந்த கால அரசாங்கங்கள் இனங்கண்ட இடங்களில் தான் கனிம மண் அகழ்வு, காற்றாலை திட்டம் போன்றவற்றை இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது. இவ்வாறான திட்டங்களினால் மக்கள் வெகுவாக பாதிப்படைகின்றனர். 

இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், குடியேற்றத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. கிட்டத்தட்ட கிராஞ்சிப் பகுதியில் 8000 தென்னம் பிள்ளைகளை அழித்து ஒரு அபிவிருத்தி நடக்கின்றது.

அவ்வாறான ஒரு அபிவிருத்தி எமக்கு தேவையில்லை. கிராஞ்சி மக்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வா தாரமாகக் கொண்டு இருக்கின்றார்கள்.அவ்வாறு 2000 குடும்பங்கள் தென்னம்பிள்ளைகளை வாழ் வாதாரமாக நம்பி அங்கு வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசு அவற்றை அழித்து இவ்வாறான ஒரு அபிவிருத்தியைக் கொண்டு வருவதை ஏற்கமாட்டோம்.

மக்களினுடைய வளம், நிலம் சுரண்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான செயல்பாடுகளையும், தமது கிராமத்தினுடைய வளத்தையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் முகமாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடுகிறது. 

இதில் அரசியல் வாதிகள் மத தலைவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!