மாகாண சபை தேர்தல் முறைமைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதே ஜே.வி.பிதான்!!

#SriLanka #Election #jvp #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
மாகாண சபை தேர்தல் முறைமைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதே ஜே.வி.பிதான்!!

மாகாண சபை தேர்தல் முறைமைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஜே.வி.பி அரசாங்கமே ஈடுபட்டது என முன்னாள் அமைச்சர்   ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில்நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாரிய போராட்டத்துக்கு மத்தியில் தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. காலவோட்டத்தில் பல விடயங்கள் மறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜென் சி தலைமுறையினருக்கு மாகாணசபை முறைமை பற்றி தெரியாது.

 மாகாணசபை முறைமை உரிமைக்காக போராடிய பலர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் சிலர் இன்றும் உயிருடன் உள்ளார்கள். ஆகவே மாகாணசபை முறைமை என்பது இலங்கை வரலாற்றில் பாரியதொரு திருப்புமுனையாகும்.அதிகார பகிர்வுக்கான ஆரம்பக்கால நடவடிக்கைகள் முழு நாட்டுக்கும் தீ வைத்தது.

 ஆரம்பகால அதிகார பகிர்வுக்கு வடக்கின் பயங்கரவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.தெற்கின் பயங்கரவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். வடக்கின் பிரதிநிதிகள் சமஸ்டிக்கு அப்பாற்பட்ட வகையில் அதிகாரபகிர்வை கோரினார்கள்.

 இன கலவரத்தை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்தே மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகார பகிர்வு அப்போதைய காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பு அதிகார பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்து, அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போது ஜே.வி.பி. முழு நாட்டுக்கும் தீ வைத்தது.

 மாகாணசபை முறைமைக்கு எதிராக போராட்டத்தை நடத்தி ஜே.வி.பி.யினர் 6682 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டார்கள். 1000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், 485 அரச உத்தியோகத்தர்களும், 357 பொலிஸாரும், 15 இராணுவ அதிகாரிகளும், 202 இராணுவ வீரர்களும், 187 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களும், 52 அதிபர்களும், 42 பிக்குகளும் உட்பட சிவில் மக்களும், ஊடகவியலாளர்களும், கலைஞர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!