இங்கிலாந்தில் கடுமையான வெப்பநிலை காரணமாக நான்கு சிறுவர்கள் மரணம்
#Death
#Lanka4
#heat
#Climate
#England
#L4
Prasu
1 hour ago
இங்கிலாந்தில் கடுமையான வெப்பநிலை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில் 34.8°C என்ற மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் 36°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக மக்கள் நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவ்வாறு நீரில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சாதனை அளவிலான வெப்பநிலையைத் தொடர்ந்து, இன்று “கடுமையான” இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழைக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )