மூன்று ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயண தடை விதித்த கனடா
#Canada
#Disease
#Lanka4
#Banned
#Virus
#L4
Prasu
1 month ago
எபோலா வைரஸ் தொற்று காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரங்களில் இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும் அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்திருந்தது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே