தவறான பாதையில் செல்லும் துறவிகள் மீதுதான் சமூகத்தின் கண்ணோட்டம் உள்ளது - கஸ்ஸப தேரர் விமர்சனம்!

#SriLanka #Anuradapura #Abuse #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
தவறான பாதையில் செல்லும் துறவிகள் மீதுதான் சமூகத்தின் கண்ணோட்டம் உள்ளது -  கஸ்ஸப தேரர் விமர்சனம்!

துறவிகளின் ஒழுக்கத்தன்மையை முதலில் சங்க நீதிமன்றங்கள் மூலமே விசாரணை செய்ய வேண்டும். அதன்பின்னரே சாதாரண நீதிமன்றத்தக்கு அதனை கொண்டு செல்ல வேண்டும்.

 ஒரு தனிப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் அவமதிக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

 இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல்லேகம ஹேமரத்ன தேரர் தற்போதைய நிலையில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை. ஒரு சிறிய குழந்தை துன்புறுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. நீதிமன்றம் ஊடாக அதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

 ஆனால், நீதிமன்றம் ஒருவரை குற்றவாளியாக அறிவிக்கும் முன்பே, சமூக ஊடகங்கள் அவரை குற்றவாளியாக்கி தீர்ப்பு வழங்கிவிட்டன. பௌத்த துறவிகள் என்ற வகையில், புத்த பெருமானால் அருளப்பட்ட தர்ம ஒழுக்கநெறிக்கு அமையவே துறவிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

 இதற்காக அரசியலமைப்பின் 105(4) பிரிவின் கீழ் சங்க நீதிமன்றங்களை ஸ்தாபிக்க முடியும். இருப்பினும், அதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றம் இதுவரை சட்டமாக்கவில்லை. இதனாலேயே துறவிகளின் பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கி, ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 பல்லேகம ஹேமரத்ன தேரர் என்பவர் ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர் அல்ல, அவர் அட்டமஸ்தானத்தின் விகாராதிபதி மட்டுமே. அவர் விகாராதிபதியாக இருப்பதன் அர்த்தம், அவர் மட்டுமே பௌத்த சாசனத்தில் இருக்கும் ஒரேயொரு பிக்கு என்பது அல்ல.

 அவரை விடவும் ஒழுக்க சீலர்களாக தர்மத்தின் வழி வந்த பல தேரர்கள் இன்று ஆரண்யங்களில் வசிக்கின்றனர். அவர்களைப் பற்றி எவரும் பேசுவதில்லை. 

தற்போதைய சமூகத்தில் நல்லொழுக்கத்தைப் பேணும் துறவிகளை விட, தவறான பாதையில் செல்லும் துறவிகள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

 எனவே, துறவியோ அல்லது குருவோ யாராக இருந்தாலும், நாட்டின் குழந்தைகளை துன்புறுத்துவார்களாயின் அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4