IPL PlayOff - இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

#Lanka4 #IPL #T20 #Cricket #Gujarat #Bengaluru #L4
Prasu
1 hour ago
IPL PlayOff - இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

19வது ஐ.பி.எல் தொடரின் தகுதி சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்தது. 

பெங்களூரு அணி சார்பில், விராட் கோலி 43 ஓட்டங்களும் தேவ்தத் பட்டிக்கல் 30 ஓட்டங்களும் குர்ணால் பாண்ட்யா 43 ஓட்டங்களும் ரஜத் படிதார் 93 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 162 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

குஜராத் அணி சார்பில், ஜோஷ் பட்லர் 29 ஓட்டங்களும் திவேட்டியா 63 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!