சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வெற்றிடங்களை உடனே நிரப்ப அமைச்சர் உத்தரவு!

#SriLanka #children #Minister #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வெற்றிடங்களை உடனே நிரப்ப அமைச்சர் உத்தரவு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக, அங்கு நிலவும் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சருக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கும் இடையில் அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் தரங்கணி விக்கிரமசிங்க, மேலதிக செயலாளர் (நிர்வாகம்), தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க மற்றும் அதன் பிரதித் தலைவர் கிளிஃபோர்ட் பெரேரா உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, நிறுவனத்தின் செயல்பாடுகளில் அதன் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சிறுவர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் அது சார்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்ட அமுலாக்கங்களை எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்ற பின்னணியில், இந்த விசேட நியமனங்கள் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!