இன்றைய வானிலை - தென்மேற்கு பகுதிகளில் அதிக மழை பெய்யும்!

#SriLanka #weather #report #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
இன்றைய வானிலை - தென்மேற்கு பகுதிகளில் அதிக மழை பெய்யும்!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைப்பொழி  அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

 இப்பகுதிகளில் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதேநேரம் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால்  ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4