40 நாடுகளுக்கான இலவச விசா செயல்முறை - இன்று முதல் நடைமுறைக்கு!

#SriLanka #Visa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
40 நாடுகளுக்கான இலவச விசா செயல்முறை - இன்று முதல் நடைமுறைக்கு!

இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

 அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, மலேசியா, சவுதி அரேபியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம்  மற்றும் அமெரிக்கா ஆகிய 40 நாடுகளின் பிரஜைகள் இந்த சலுகையை பெற முடியும். 

 இதேவேளை குறித்த 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளும்  இலங்கைக்கு வருகைத் தர முன்னர் இணையவழி சுற்றுலா அனுமதி  ஒன்றைப் பெற்றுக்கொள்வதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 மேலும் இந்த இலவச விசாவைப் பெற்றுக்கொண்டு 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், அதற்குரிய விசா கட்டணத்தைச் செலுத்தி விசா காலத்தை நீடிப்பதற்குக் விண்ணப்பிக்கலாம்.

 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )






இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4