வாகனம் மற்றும் தங்கக் கடனுக்கான LTV விகிதங்களை கடுமையாக்க தீர்மானம்!
#SriLanka
#Central Bank
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Loan
Thamilini
1 hour ago
வாகனக் கடன் மற்றும் தங்கக் கடன்களுக்கான தற்போதைய அதிகபட்ச LTV விகிதங்களை மேலும் கடுமையாக்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுகை சபை தீர்மானித்துள்ளது.
புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கமைய உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (LTV) 70 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் (LTV limits) மேலும் 10 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன.
தங்கம் மற்றும் வாகனக் கடன்கள் அண்மைக்காலமாக மிக வேகமாக அதிகரித்து வருவதால், அது நிதி அமைப்பில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )