IPL M70 - 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
#Delhi
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Kolkatta
Prasu
1 hour ago
ஐ.பி.எல் தொடரின் 70வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 203 ஓட்டங்கள் குவித்தது.
டெல்லி அணி சார்பில், அபிஷேக் பொரெல் 22 ஓட்டங்களும் கே.எல். ராகுல் 60 ஓட்டங்களும் அக்சர் படேல் 39 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 204 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்கள் குவித்தது.
கொல்கத்தா அணி சார்பில், அஜிங்கியா ரஹானே 63 ஓட்டங்களும் பின் ஆலென் 20 ஓட்டங்களும் மணிஷ் பாண்டே 25 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
(வீடியோ இங்கே )