டிக்கோயா இரட்டை கொலை விவகாரம் : தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது!

#SriLanka #Arrest #Police #Crime #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
டிக்கோயா இரட்டை கொலை விவகாரம் : தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது!

டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக ஹெட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தவிர, பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 கடந்த 21 ஆம் திகதி  85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுண் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!