கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக ஆரம்பமான விசேட நடைபவணி: பேருந்து நிலையம் வரை திரண்ட மக்கள்!

#SriLanka #Kilinochchi #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக ஆரம்பமான விசேட நடைபவணி: பேருந்து நிலையம் வரை திரண்ட மக்கள்!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினர் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று (23.05.2026) விசேட நடைபவணி (பேரணி) ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று காலை கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடைபவணி, ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது.

பேரணியின் நிறைவில், தற்காலத்தில் இளையோர் மத்தியில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் சமூகச் சீரழிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விசேட கருத்துரைகளும், இளைஞர்களின் பங்கேற்புடன் தெருக்கூத்து பாணியிலான விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டன.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இங்குமரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவிலான மாவட்ட இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!