IPL M67 - 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி
#Lanka4
#IPL
#T20
#Cricket
#hyderabad
#Bengaluru
#2026
Prasu
1 hour ago
ஐ.பி.எல் தொடரின் 67வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் குவித்தது.
சன்ரைசர்ஸ் சார்பில், அபிஷேக் சர்மா 56 ஓட்டங்களும் கிளாசன் 51 ஓட்டங்களும் இஷான் கிஷன் 79 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
பெங்களூரு அணி சார்பில், வெங்கடேஷ் ஐயர் 44 ஓட்டங்களும் க்ருணால் பாண்டியா 41 ஓட்டங்களும் ரஜத் படிதார் 56 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )