பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்குத் தெரியும்; ஆனால் சொல்ல மாட்டேன்! - சரத் பொன்சேகா அதிரடிப் பேட்டி!

#SriLanka #Sarath Fonseka #Body #Lanka4 #Prabhakaran #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்குத் தெரியும்; ஆனால் சொல்ல மாட்டேன்! - சரத் பொன்சேகா அதிரடிப் பேட்டி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் எங்கு தகனம் அல்லது அடக்கம் செய்யப்பட்டதுஎன்ற விபரம் தனக்குத் தெரியும் "இடத்தைக் கூறினால் நினைவகம் அமைக்க முயல்வார்கள்" - பிரபாகரனின் சடலம் குறித்து சரத் பொன்சேகா வெளியிட்ட இரகசியம்! ஒருபோதும் பகிரங்கப்படுத்தப் போவதில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வலை தளம் (YouTube Channel) ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த நேர்காணலில் பிரபாகரனின் சடலத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடையளித்த சரத் பொன்சேகா: "பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது இரகசியமல்ல. 

அவரது சடலம் மீட்கப்பட்டவுடன், கிழக்கின் முன்னாள் தளபதி கருணா அம்மானை (விநாயகமூர்த்தி முரளிதரன்) அவசரமாக விமானம் மூலம் அனுப்பி, பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை மற்றும் பொட்டு அம்மானின் மனைவி ஆகியோரின் சடலங்களை நாம் அடையாளம் கண்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"மீட்கப்படும் போது பிரபாகரனின் சடலத்தில் பாரிய காயங்கள் இருந்தன. அவர் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இராணுவச் சீருடையில் இருந்தார். ஒரு நாட்டின் இராணுவத் தளபதி என்ற ரீதியில், பயங்கரவாத அமைப்பின் சீருடையுடன் அவரது சடலத்தைப் படம்பிடிக்கவோ அல்லது வைத்திருக்கவோ நான் விரும்பவில்லை. 

எனவே, அந்தச் சீருடையை உடனடியாக அகற்றுமாறு எனது படையினருக்கு நான் கட்டளையிட்டேன்" என்றும் பொன்சேகா விவரித்துள்ளார். பிரபாகரனின் சடலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தானே இறுதி ஆலோசனைகளை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர்: "குறிப்பிட்டதொரு பகுதியிலேயே இறுதியாக செய்யவேண்டிய கிரியைகளைச் செய்தோம். 

ஆனால், அந்த இடத்தை நான் பகிரங்கமாகச் சொல்ல மாட்டேன். அவ்வாறு கூறினால், அந்த இடத்திற்குச் சென்று சிலர் நினைவேந்தல்களை நடத்த முற்படலாம் அல்லது அங்கு நினைவகம் ஒன்றை அமைக்கவும் முயற்சிக்கலாம். 

அதற்கு நாங்கள் இடம் கொடுக்க முடியாது" என்றார். மேலும், இறுதிப் போரின் போது பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ இருக்கவில்லை என்றும், களத்தில் இருந்த நிலைமையின்படி அவரை உயிருடன் பிடிப்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் சரத் பொன்சேகா அந்த நேர்காணலில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!