6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: இரத்தினபுரி, கேகாலைக்கு 'சிவப்பு' அபாயம்!

#SriLanka #Warning #Danger #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: இரத்தினபுரி, கேகாலைக்கு 'சிவப்பு' அபாயம்!

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (22) காலை 6 மணி முதல் நாளை (23) காலை 6 வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரத்தினபுரியின் மிஹிட்டிய, ஹேலஉட பகுதியில் பிரதான வீதியில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 மண்சரிவு அபாய எச்சரிக்கை விபரங்கள்: நிலை 3 - சிவப்பு (அபாய எச்சரிக்கை):

கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவு.

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு.

கொழும்பு: சீதாவாக்க, பாதுக்கை 

கம்பஹா: அத்தனகல்ல 

களுத்துறை: இங்கிரிய, புளத்சிங்கள

இரத்தினபுரி: குருவிட்ட, அயகம, பெல்மதுல்ல 

கேகாலை: ருவான்வெல்ல 

நிலை 1 - மஞ்சள் (கண்காணிப்பு எச்சரிக்கை):

இரத்தினபுரி: எஹலியகொட, நிவித்திகல, கலவானை 

நுவரெலியா: அம்பகமுவ 

கேகாலை: யட்டியாந்தோட்டை

அதிகாரிகளின் அறிவுறுத்தல்: தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வருவதால் மேல், சபரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

இதனால், மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4