யாழில் தொடரும் சீதனக் கொடுமை - மாமியாரின் நச்சரிப்பால் உயிர் மாய்த்த இளம் பெண்!

#SriLanka #Jaffna #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
யாழில் தொடரும் சீதனக் கொடுமை - மாமியாரின் நச்சரிப்பால் உயிர் மாய்த்த இளம் பெண்!

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

 யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி என்ற 19 வயதுடைய பெண் ஒருவரே  இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண், இளைஞர் ஒருவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார். 

எனினும், இவர்களது திருமணத்தைக் கணவனின் தாயார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. திருமணத்தின் பின்னர், 25 பவுண் தங்க நகையையும் வீடு ஒன்றையும் சீதனமாகக் (வரதட்சணை) கேட்டு கணவனின் தாயார் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் காணப்பட்டதால், கோரப்பட்ட சீதனத்தை அவர்களால் வழங்க முடியவில்லை.

 இந்தநிலையில், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு கணவனின் தாயார் முயற்சிகளை மேற்கொண்டபோது, தனது கணவனை வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என அந்தப் பெண் கோரியுள்ளார்.

 எனினும், ‘உனது குடும்பத்தினர் என் தாயார் கேட்ட சீதனத்தைத் தராத காரணத்தினால்தான் நான் வெளிநாட்டுக்குப் போகின்றேன்’ எனக் கணவனும் தெரிவித்துள்ளார்.

 இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் உள்ளான இளம் பெண், நேற்றுக் காலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

 இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார். 

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!