ஆசிய நாடுகளிலேயே மோசமான நிலைமையில் இலங்கை : அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

#SriLanka #Dollar #Asia #economy #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
ஆசிய நாடுகளிலேயே மோசமான நிலைமையில் இலங்கை : அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபாய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள வர்த்தக செய்தித் தளம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சமீபத்திய நாட்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,  மேலும் அதன் மதிப்பு குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியலுக்கான திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகொரல, குறுகிய காலத்திற்குள் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிவது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டினார். 

நிலைமையைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பணவீக்கம் கடுமையாக உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4