எல்லாம் அரசியல் நாடகம் : விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம் - நாமல் கொதிப்பு!

#SriLanka #Namal Rajapaksha #Easter Sunday Attack #pillaiyan #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
எல்லாம் அரசியல் நாடகம் : விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம் - நாமல் கொதிப்பு!

சிறையில் இருந்த பிள்ளையானை நான் சந்தித்தது ஒன்றும் இரகசியமல்ல,அரசியல் நாடகத்தை தவிர்த்த முறையான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையானை மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நேரில் சென்று சந்தித்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துள்ளதை தொடர்ந்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை நான் நேரில் சென்று சந்தித்தேன் என்பது இரகசியமான ஒன்றல்ல. உண்மையில், நான் அங்கு சென்றதற்கான சிறைச்சாலை பதிவுகள் தற்போதும் மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. 

அந்த காலகட்டத்தில், பிள்ளையான் 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகிய இரண்டிலும் எங்களுடன் கூட்டணியின் பங்காளியாகவே போட்டியிட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பிரான்ஸ் வரை பயணித்ததாகக் கூறப்படும் விடயம், இயல்பாகவே அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. 

பிள்ளையானை நான் சந்தித்ததை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே அதிகாரிகள் அவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார்கள் என்றால், அது நிச்சயமாக பொதுப் பணத்தை வீணடிக்கும் ஒரு செயலாகும். எனக்குத் தெரிந்தவரை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. அப்படியிருக்க, இவ்வாறான ஊடக நாடகங்கள் மூலம் அரசாங்கம் யாரைத்தான் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது?

 தேசிய மக்கள் சக்தியானது , ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான கதைகளையே குறிப்பிடுகிறது. தற்போது இந்த துயர சம்பவத்தை அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதற்காக அரசாங்கம் பயன்படுத்த முயலுமாயின், அது இன்னமும் உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இழைக்கப்படும் கடுமையான அநீதியாகும்.

 எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகம்கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அத்துடன், எந்தவொரு சந்தேகத்தையும் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் தீர்த்துக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறான அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகள் மீது கவனம் செலுத்துவதை விடுத்து, அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!