பால்மா விலை அதிகரிப்பின் எதிரொலி : தேநீருக்கான விலையும் அதிகரிப்பு!
#SriLanka
#prices
#Milk Powder
#Tea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பால் தேநீருக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பால் தேநீர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )