அரிசி, சீனி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்பு!
#SriLanka
#prices
# essential
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சர்க்கரை, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் காலத்தில் அதிகரிக்கும் என சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே