கொலொன்னவில் பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
கொலொன்னவில் பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

கொலொன்ன, மருத்துவமனை வீதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

கொலொன்னவைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலத்தின் தலைப்பகுதியில் இரத்தக் கறைகளும், காலில் சந்தேகத்திற்கிடமான வெட்டுக் காயமும் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், தனது மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

அவர் மே 18 ஆம் திகதி மாலையில் தனது சகோதரியின் வீட்டிலிருந்து இந்தப் பாழடைந்த வீட்டிற்கு வந்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இந்த வீட்டில் பலமுறை தங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

 இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால், கொலொன்ன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!