நாடு முழுவதும் 30,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவு!
#SriLanka
#Dengue
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் சுமார் 30,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தகவல் வெளியிட்டுள்ளது.
2026 மே 18 ஆம் திதகிக்குள் 29,589 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் டெங்கு தொடர்பான 15 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மூக சுகாதார நிபுணர் டாக்டர் பிரஷில சமரவீர தெரவித்தார்.
அத்துடுன் அதிக ஆபத்துள்ள இடங்களாக 39 இடங்கள் அடயாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பிரிவுகளுக்கு அவசர கவனம் தேவைப்படுவதாகவும் சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மேற்கு மாகாணத்தில் அதிகபட்ச நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பதிவாகியுள்ளன.