பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!
#SriLanka
#School
#Student
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 711 ஆகவும், 2025 இல் 885 ஆகவும் காணப்படுகிறது.
பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை 2024 இல் 597 ஆகவும், 2025 இல் 301 ஆகவும் இருந்தது.
மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 309 ஆகவும், 2025 இல் 210 ஆகவும் காணப்படுகிறது. பாடசாலையில் சேர்க்கப்படாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 47 ஆகவும், 2025 இல் 91 ஆகவும் உள்ளது." என்றார்.
(வீடியோ இங்கே )