நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் பின்தங்கும் அபாயம் - மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

#SriLanka #Central Bank #nandalal weerasinghe #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் பின்தங்கும் அபாயம் - மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது துல்லியமனா கணிப்பொன்றை மேற்கொள்வது கடினமாக உள்ளது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், "இந்த ஆண்டும் பொருளாதார வளர்ச்சி சுமார் 5 சதவீதமாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மார்ச் மாதத்தின் பின்னர், குறிப்பாக ஏப்ரல் போன்ற மாதங்களில் உலகப் பொருளாதார நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால், அதற்குப் பின்னரான அடுத்த மூன்று மாதங்களின் நிலைமை எவ்வாறு அமையும் என்று கணிப்பது கடினமாக உள்ளது. 

 எனவே, இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், தற்போதைய கணிப்பு 5 சதவீத அளவாகவே இருந்தது. இது வந்ததன் பின்னர் எதிர்வரும் காலத்தில் எவ்வாறு மாறும், எப்பொழுது ஸ்திரமடையும் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. அதனால் ஒரு கணிப்பை மேற்கொள்வது கடினம்.

 ஒன்றை மட்டும் கூற முடியும், இது மூன்று மாதங்களில் முடிவடைந்து, அடுத்த மூன்று மாதங்கள் சாதாரண நிலைக்குத் திரும்பினால், அந்த மூன்று மாத கால தாக்கம் மாத்திரமே ஏற்படும். அப்போது 5 சதவீதம் என்பது சற்று குறையக்கூடும். 

 ஆனால், இந்த மூன்று மாத கால நிலைமை மேலும் 6 மாதங்கள் அல்லது 9 மாதங்களுக்கு நீடித்தால், அந்தத் தாக்கம் பொருளாதார வளர்ச்சியில் இன்னும் பெரியளவில் பாதிக்கலாம். அதை இப்போது கணிப்பது கடினம். ஏனெனில், அதன் பிறகு மேலும் என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. 

 எனவே, இந்த சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கத்தைக் கொண்டு துல்லியமாகக் கணிப்பது கடினம். ஏனெனில் எண்ணெய் விலை அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால் இரண்டாவது மூன்று மாதங்களுக்குள் (இரண்டாவது காலாண்டில்) ஏற்கனவே ஒருவித தாக்கம் ஏற்பட்டுள்ளது." என்றார்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )





உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!