கிளிநொச்சியில் முழுமையாக முடங்கிய வர்த்தக நிலையங்கள்:

#SriLanka #Kilinochchi #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கிளிநொச்சியில் முழுமையாக முடங்கிய வர்த்தக நிலையங்கள்:

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (18), கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் தங்களது வர்த்தகச் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தி, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வர்த்தகப் புறக்கணிப்புக்கு மத்தியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் வலியை சுமந்தவாறு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களுக்கு கஞ்சி விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!