சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழப்பாணம் வந்தவர் படுகொலை - நகைகள் மற்றும் பணம் மாயம்!

#SriLanka #Jaffna #Switzerland #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழப்பாணம் வந்தவர் படுகொலை - நகைகள் மற்றும் பணம் மாயம்!

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவரை கொலை செய்து, அவரது வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பனவற்றை முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. 

 மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

 குறித்த நபர் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், 2 மாத கால விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தமது சொந்த வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். 

 இந்நிலையில், கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேற்று (16) அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மானிப்பாய் பொலிஸார் வீட்டுக்கு சென்ற போது அங்கு தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, குறித்த நபரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

 சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

 பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்கள் சேதமாக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் சேதமாக்கப்படுவதற்கு முன்னர் பதிவான காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்த நிலையில் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல் ஒன்று உள்நுழைந்தமை கண்டறியப்பட்டுள்ளது. கு

றித்த நபரின் வீட்டிற்குள் புகுந்தவர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களை சேதமாக்கிய பின்னர், அவரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். 

அதேவேளை உயிரிழந்தவரின் உடலின் 8 இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!