மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு - சேவைகள் நிறுத்தம்!

#SriLanka #service #certificate #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு - சேவைகள் நிறுத்தம்!

மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவில் உள்ள அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

 இந்தத் தற்காலிக நிறுத்தம், பத்தரமுல்லவில் உள்ள தூதரக விவகாரங்கள் பிரிவின் தலைமையகம் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை, குருநாகலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள அனைத்து மண்டல தூதரக அலுவலகங்களுக்கும் (RCOs) பொருந்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து, e-DAS அமைப்பை கூடிய விரைவில் சரிசெய்து, தாமதமின்றி இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 இதற்கிடையில், ஏற்கனவே இணையவழியில் சந்திப்பு நேரத்தைப் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், மேலதிக அறிவிப்புகள் மற்றும் தகவல்களுக்காக e-சேனல் சந்திப்பு நேர அமைப்பைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

 அமைப்பு சரிசெய்யப்பட்டவுடன், பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதற்கேற்ப தகவல் தெரிவிக்கப்படும் என்று அமைச்சு கூறியுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4