வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்யும்!

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பின்படி,  மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதேபோல்   பிற்பகல் 1.00 மணிக்கு மேல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை, தற்காலிகமாக ஏற்படும்  பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!